எச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்

எச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்
எச்சரித்த ஆட்சியருக்கு கண்டனம்: கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் ஊழியர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு எதிராக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து திருவண்ணாமலை ஆட்சியர் மற்ற அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில் அவர் பேசிய ஆடியோ வெளியானது. அதில், “வீடுகளை ஒதுக்குவதற்கு திங்கள்கிழமைதான் (இன்று) கடைசி நாள். நீங்கள் பணியில் இருக்கிறீர்களா?. வீடுகளை ஒதுக்காமல் இருக்கும் எத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்ய தயார். தப்பு நடப்பதை பார்ப்பதற்காக நான் இங்கு அமரவில்லை. தப்புகளுக்கு காவல் காப்பவன் நான் இல்லை என கடுமையாக எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என ஆட்சியர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணி செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com