\
பரவை முனியம்மா உடல்நிலையில் முன்னேற்றம்

பரவை முனியம்மா உடல்நிலையில் முன்னேற்றம்

பரவை முனியம்மா உடல்நிலையில் முன்னேற்றம்
Published on: 

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரவை முனியம்மாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

84 வயதாகும் பாடகி பரவை முனியம்மா, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர் ஏற்கெனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரவை முனியம்மா மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது, உடல்நிலை மெல்ல மெல்ல சீராகி வருவதாக தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com