பழங்காலத்து இரும்பு பெட்டிPT Tesk
தமிழ்நாடு
வேலூர்: மசூதிக்கு அருகே பழங்காலத்து இரும்பு பெட்டி... புதையல் பெட்டியென பரவிய செய்தியால் பரபரப்பு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மசூதிக்கு அருகில் கிடந்த பழங்காலத்து இரும்பு பெட்டியில் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதியில் இரும்புப் பெட்டி கிடப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சென்றனர். அங்கு பல மணி நேரம் முயற்சித்தும் பெட்டியை உடைக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். இயந்திரம் மூலம் உடைக்க முயற்சிக்கும் பலன் அளிக்கவில்லை.
இந்த பெட்டி குறித்து அதிகாரிகள் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த இந்தியாஸ் என்பவர் 25 ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த இரும்பு லாக்கர் பெட்டியை பராமரிக்க முடியாததால் அதனை மசூதிக்கு வழங்குவதற்காக எடுத்து வந்து வைத்ததாக கூறியுள்ளார். முன்னதாக பெட்டியில் புதையல் இருப்பதாக தகவல் பரவியிருந்ததால் அப்பகுதியில் மக்கள் அதிகம் குவிந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.