ஆளுநர் ஆர்.என். ரவிமுகநூல்
தமிழ்நாடு
”சுதந்திரத்திற்கு பிறகு மக்களிடையே ஆட்சியாளர்கள் பிரிவினையை உண்டாக்கினார்கள்” - ஆளுநர் ஆர்.என். ரவி!
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மக்களிடையே ஆட்சியாளர்கள் பிரிவினையை உண்டாக்கியதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மக்களிடையே ஆட்சியாளர்கள் பிரிவினையை உண்டாக்கியதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவில் சிறப்புரையாற்றிய அவர், தமிழ்நாட்டிற்கும் நேதாஜிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள பாடப்புத்தகங்களில் கூட நேதாஜி குறித்த வரலாற்று குறிப்புகள் முழுமையாக இல்லை என தெரிவித்த ஆளுநர், இந்திய சுதந்திரத்திற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் மக்களிடையே பிரிவினையை தான் உருவாக்கினார்கள் என குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக சாதியின் பெயரால் பிரிவினையை உருவாக்கியதாகவும், ஒரு பட்டியலினத்தவரால் பஞ்சாயத்து தலைவராக முடிவதில்லை, அப்படி ஆனாலும் அவரால் பதவியில் இருக்க முடிவதில்லை எனவும் ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.