தமிழ்நாடு
ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு
ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு
தட்டமை மற்றும் விளையாட்டம்மை தடுப்பூசி முகாம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் திட்டம் பிப்ரவரி 28ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அறிவிப்பை தமிழக பொதுசுகாதார இயக்குனர் குழந்தைசாமி வெளியிட்டுள்ளார். 9 மாதம் முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள், சிறுவர், சிறுமியருககு கடந்த 6ம் தேதியிலிருந்து தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஒரு கோடியே 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 77 லட்சம் பேருக்கு ஊசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தடுப்பூசியை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்பசுகாதார நிலையங்களிலும் போட்டுக்கொள்ளலாம் என்றும் குழந்தைசாமி தெரிவித்தார்.