காவலர் உடல் தகுதித் தேர்வு: ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்

காவலர் உடல் தகுதித் தேர்வு: ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்
காவலர் உடல் தகுதித் தேர்வு: ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்
Published on

காவலர் உடல் தகுதித் தேர்வில் பங்கு பெறுவோர் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு வர வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், 28640 பேர் சீருடை பணியாளர் தேர்வை எழுதினர். இதில் தேர்வு பெற்ற 3794 பேருக்கான, உடல் தகுதித் தேர்வு, வருகிற 26ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை, அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. தேர்விற்கு வருபவர்கள் அனைவரும், நான்கு நாட்களுக்கு முன்னதாக, கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வர, காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 11,813 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, உடல் தகுதித் தேர்வு, தமிழகம் முழுவதும், நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com