சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டது ஏன்..? கண்டறிவதில் தோல்வி கண்ட ஆர்டிஐ..!

சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டது ஏன்..? கண்டறிவதில் தோல்வி கண்ட ஆர்டிஐ..!
சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டது ஏன்..? கண்டறிவதில் தோல்வி கண்ட ஆர்டிஐ..!

சஞ்சய் தத் எதன் அடிப்படையில் முன்னரே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பதை கண்டறிவதில் தகவல் அறியும் உரிமை சட்டமும் தோல்வி கண்டுள்ளது.

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தண்டனை காலம் முடிவதற்கு 8 மாதத்திற்கு முன்னதாக விடுவிக்கப்பட்டார். அதாவது கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார். சிறை நன்னடத்தை விதி காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என சிலர் கோரிக்கை வைக்கின்றனர். இதனிடையே எந்த விதிமுறையை பயன்படுத்தி சஞ்சய் தத், சிறைகாலம் முடியும் முன்பதற்கே விடுதலை செய்யப்பட்டார் என்பதை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தை நாடியிருந்தார் பேரறிவாளன். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டமும் இதனை கண்டறிவதில் தோல்வி கண்டுள்ளது.

அதாவது சஞ்சய் தத் தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் தெரிவிக்க முடியாது என மகாராஷ்டிரா சிறைத் துறை மாநில தகவல் ஆணையத்திடம் தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக எந்தவிதிமுறையை பயன்படுத்தி சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது.

முன்னதாக இதுதொடர்பாக சஞ்சய் தத் மும்பை ஏரவாடா சிறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், “என் அனுமதி இல்லாமல் என் சார்ந்த விஷயங்களை தெரியப்படுத்த வேண்டாம். நீங்கள் அதனை செய்வீர்கள் என நம்புகிறேன்” என கூறியிருந்தார். தற்போது அதன் அடிப்படையிலேயே மகாராஷ்டிரா சிறைத்துறை அவர் சார்ந்த விஷயங்களை தகவல் ஆணையத்திடம் தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் 8(J), தனிநபர் சார்ந்த விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் உள்ளதாகவும், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேசிய பேரறிவாளனின் சட்ட ஆலோசகர், “ பேரறிவாளன் மற்றும் சஞ்சய் தத்தின் விவகாரம் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானது. அதனால் எந்தவிதிமுறையை பயன்படுத்தி சஞ்சய் தத் முன்னரே விடுவிக்கப்பட்டார் என்பதை கோரினோம். ஆனால் சஞ்சய் தத்தின் கடிதத்தை காரணம் காட்டி மகாராஷ்டிரா சிறைத்துறை சொல்ல மறுக்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசும் சஞ்சய் தத்திற்கு சாதகமாக செயல்படுகிறது. விதிவிலக்காக அவருக்கு மட்டும் சிறப்பு சலுகை அளிக்கின்றனர்.” என தெரிவித்தார்.

Courtesy: The Times of India

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com