\
மதுரை வந்தடைந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

மதுரை வந்தடைந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

மதுரை வந்தடைந்தார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Published on: 

ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பகவத், மூன்று நாள் சுற்றுப்பயணமாக மதுரை வந்தடைந்தார்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவருக்கு இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து டி.வி.எஸ். நகரில் உள்ள சத்ய சாய் நகருக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, மோகன் பகவத் வந்த அதே விமானத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியும் வந்திருந்தார். மதுரை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் நிறுத்துவதற்கான பகுதியில் நவாஸ்கனியின் காருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com