வேலூரில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி

வேலூரில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி

வேலூரில் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி
Published on

வாணியம்பாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதிகப்படியான பணம் மற்றும் பொருட்கள் வேட்பாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் முறைகேடாக வாகனங்களில் பணம் எடுத்து செய்யப்படுகிறதா என்பதை சோதனை செய்வதற்காக வாணியம்பாடி காதர் பேட்டை பகுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி தலைமையில் நடைபெற்ற இச்சோதனையில், கார் ஒன்றில் 3 கிலோ தங்கம் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

அந்த தங்கத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அந்த கார் ஆம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் ஆச்சாரி என்பவருடையது என தெரியவந்தது. பின்னர், பறிமுதல் செய்த தங்கத்தை வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com