
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ், மருந்தக ஊழியாக பணியற்றி வருகிறார். இவரின் வங்கி கணக்கில் நேற்று கோட்டக் மகிந்திரா வங்கியில் இருந்து ரூ.750 கோடி கிரெடிட் செய்யப்பட்டுள்ளது.
இதனால் தனது வங்கிக்கணக்கை கோட்டக் மகிந்திரா வங்கியானது முடக்கி வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட முகமது இத்ரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இப்படி தவறான வங்கிக்கணக்கில் பணம் வரவுவைக்கப்படுவது, இது முதல் முறையல்ல. அண்மையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரது வங்கி கணக்கிற்கு ரூ.9,000 கோடி கிரெடிட் செய்யப்பட்டது. அதனை உடனடியாக வங்கி நிர்வாகமானது திரும்பி பெற்றது.
இவ்விவகாரத்தில், வங்கியின் முதன்மை அதிகாரிகள் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகுவதாக வங்கித்தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. ‘இதெல்லாம் ஏன் நடைபெறுகின்றன? வங்கி ஊழியர்களின் கவனக்குறைவு இதற்கு காரணமாக இருக்குமா, இல்லை முறைகேடான செயல்முறைகளில் வங்கிகள் ஈடுபடுகின்றவா?’ என்ற சந்தேகத்தை இவை எழுப்பியுள்ளன. இதுகுறித்து காவல்துறை கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் கோரிக்கை வைத்துள்ளார்.