விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன்

விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன்

விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன்
Published on

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலான பட்ஜெட் உரையில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரணத் தொகை ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறிய அமைச்சர், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 5௦0 மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தப்படும் எனவும், பயிர்காப்பீட்டு மானிய திட்டத்திற்கு ரூ.522 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டுமாடுகளை பாதுகாக்க அரசு நிதிஉதவி வழங்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், கோழிப்பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com