வாணியம்பாடி: வாகன சோதனையில் சிக்கிய ரூ.65 லட்சம் – உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

வாணியம்பாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 65 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Money seized
Money seizedpt desk

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயக்கனூர் மலைச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம் மெஷினில் நிரப்புவதற்காக 31 லட்சம் ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது,

Money seized
Money seizedpt desk

அதே போல் நேதாஜி நகர் பகுதியிலும் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம் மெஷினில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட 34 லட்சம் ரூபாய் மற்றும் ஆலங்காயம் - ஆசனாம்பட்டு சாலையில் அஜித் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 90,700 ரூபாய் பணத்தையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Money seized
அரக்கோணம்: ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.45 லட்சம் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் அதிரடி

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் ES, MS CODE- ல் வித்தியாசம் இருந்ததால் 65 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாயை மாவட்ட தேர்தல் அலுவலர் தற்பகராஜ், வாணியம்பாடி கருவூலத்தில் ஒப்படைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com