\
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்
Published on: 

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் மக்கள் நிற்கதியாக நிற்கின்றனர். பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கி, விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. 

தமிழகத்தில் நீர்நிலைகளை தூர்வாராததே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணம். ஆனால் தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்த அதிமுகவும், திமுக இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை. தற்போது தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com