மாணவர்கள் காப்பியடித்தால் கல்லூரிகளுக்கு ரூ.50,000 அபராதம் - சென்னை பல்கலை. அதிரடி

மாணவர்கள் காப்பியடித்தால் கல்லூரிகளுக்கு ரூ.50,000 அபராதம் - சென்னை பல்கலை. அதிரடி

மாணவர்கள் காப்பியடித்தால் கல்லூரிகளுக்கு ரூ.50,000 அபராதம் - சென்னை பல்கலை. அதிரடி
Published on

சென்னையில் உள்ள மூன்று கல்லூரிகள் உட்பட 4 கல்லூரிகள், தேர்வு நேரத்தில் மாணவர்களை காப்பியடிக்க அனுமதித்தது தொடர்பாக 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 120 கல்லூரிகள் சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், தேர்வு நேரத்தில் மாணவர்கள் காப்பி அடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. 

இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் துரைசாமி, மாணவர்கள் தேர்வின்போது தேர்வு மையங்களில் காப்பி அடிக்கவும், செல்ஃபோன் கொண்டு செல்லவும் அனுமதி அளிக்க கூடாது, இதனை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு மாணவர், தேர்வு தாளுடன் ரூ.500 வைத்திருந்ததாகவும், அத்துடன் அவரது தொலைபேசி எண்ணையும் எழுதி அவரை தேர்வில் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என எழுதி வைத்ததாக புகார் எழுந்தது. மேலும் தேர்வு நேரத்தின் போது மாணவர்கள் காப்பியடிக்க அனுமதித்தாகவும் நான்கு கல்லூரிகள் மீது புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து  நான்கு கல்லுாரிகளுக்கும் தலா 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் கல்லுாரிகளுக்கு, அபராதம் விதிப்பதோடு, தேர்வு மையங்கள் அமைக்க அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் சென்னை பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com