தமிழ்நாடு
அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால் ரூ.424 கோடி இழப்பு
அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால் ரூ.424 கோடி இழப்பு
அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ததால், தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு 424 கோடிரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் இதற்கான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜி.எம்.ஆர் மின் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் 15 ஆண்டு ஒப்பந்தம் 2014 உடன் முடிந்தநிலையில், மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அப்போது சந்தை விலையில் யூனிட் 3.39 மற்றும் 5.42 ரூபாய் பெற வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய் அளவிற்கு ஜி.எம். ஆர் மின் கார்ப்பரேன் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வாங்கி உள்ளது. இந்த வகையில் 424.43 கோடி ரூபாய் செலவை மிச்சப்படுத்தி இருக்கலாம் என்று தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

