\
13 மணி நேர சோதனை: எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்

13 மணி நேர சோதனை: எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்

13 மணி நேர சோதனை: எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்
Published on

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.25,56,000 பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்அவரது பெயரிலும், அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும், தம்பி சேகர் பெயரிலும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்குத் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூர் உட்பட 26 இடங்களில் சுமார் 13மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.

தற்போது நடந்துமுடிந்துள்ள இந்த சோதனையில் ரூ.25,56,000 ரொக்கம், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த சோதனைக்கு அடுத்தகட்டமாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com