\
பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: ரூ.200 கோடி ஒதுக்கீடு

பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: ரூ.200 கோடி ஒதுக்கீடு

பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: ரூ.200 கோடி ஒதுக்கீடு
Published on

1 லட்சம் பெண்கள் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று தாக்கலான தமிழக பட்ஜெட்டில், பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு ரூ 61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கருவுற்ற தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.12 ஆயிரத்திலிருந்து, 18 ஆயிரமாக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.43.76 கோடியில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் எனவும், 12 ஆரம்ப சுதாகதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. உழைக்கும் மகளிர் 1 லட்சம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ. 20,000-க்கு மிகாமல் 50 சதவிகித மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com