\
பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்..!

பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்..!

பனிச்சரிவில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்..!
Published on

காஷ்மீரில் நிகழ்ந்த பனிச்சரிவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இருவரின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி, தஞ்சை மாவட்டம் இளவரசன் ஆகிய வீரர்கள் உயிரிழந்தது அறிந்து மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இருபது லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com