தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி
தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150 கோடி

ரூ.150 கோடியில் காசிமேடு மீன்பிடித்துறைமுகம் மேம்படுத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான காசிமேடு மீன்பிடித்துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ரூ.6,607.17 கோடியும், நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்புகளுக்காக ரூ.30 கோடியும், 200 குளங்களின் தரங்களை உயர்த்த ரூ.111.24 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com