போதைப் பொருள் கடத்தல் ! சிங்கம் படம் பாணியில் கைது

போதைப் பொருள் கடத்தல் ! சிங்கம் படம் பாணியில் கைது
போதைப் பொருள் கடத்தல் ! சிங்கம் படம் பாணியில் கைது

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நட்சத்திர விடுதி, கேளிக்கை விடுதிகளுக்கு போதைப்பொருட்களை விற்க வெளிநாட்டு கும்பல் ஒன்று திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள்களை விற்பனை செய்ததாக குமரேசன், அருண் திவாகர் என்பவர்களை கடந்த 14ஆம் தேதி போரூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டுருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினர் அவர்களிடம்  தீவிர விசாரணையில் ந‌டத்தப்பட்ட போது போதைப் பொருள்கள் சப்ளை செய்து வந்தது நைஜிரியர்கள் என்பதை கண்டறிந்தனர். மேலும் குமரேசனுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த சைமன் என்பவரை பெங்களூருவில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொகைன் என் வேதியியல் பொருள் கலந்த 4 வகையான போதை பொருட்கள், 518 போதை மாத்திரைகள், எடை இயந்திரம், லேப்டாப், செல்போன், 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். 

இதனையடுத்து நைஜீரியரான சைமனை சிங்கம் திரைப்பட பாணியில் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை மையப்படுத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டு வந்தது தெரியவந்தது. சென்னையில் நட்சத்திர விடுதி, கேளிக்கை விடுதிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. 

மேலும் நைஜீரியரிடமிருந்த கைப்பற்றப்பட்ட போதை மாத்திரை ஒன்று,1500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்ததாகவும் இந்த மொத்த மதிப்பு 10 லட்சம் வரை இருக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  இந்த வகை போதை மாத்திரைகள் பயன்படுத்தும் போது சுமார் 8 மணி நேரம் வரை சுயநினைவுயின்றி போதையில் இருப்பார்கள் எனவும் இதனை இளம்பெண்களுக்கு தெரியாமல் குளிர் பணத்தில் கலந்து கொடுத்து பாலியலில் ஈடுபடும் சம்பவமும் நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தனர். மேலும்  பாலியலில் வன்முறையில் ஈடுபடும் கொடூரம் நிகழ்வுவதாகவும் அதிர்ச்சியூட்டும் தக‌வல்கள் தெரியவந்திருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com