\
கடன் வாங்கித்தருவதாக ரூ.1 கோடி மோசடி : ஒருவர் கைது

கடன் வாங்கித்தருவதாக ரூ.1 கோடி மோசடி : ஒருவர் கைது

கடன் வாங்கித்தருவதாக ரூ.1 கோடி மோசடி : ஒருவர் கைது
Published on

சென்னையில் பால் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.1 கோடி திருடிச் செல்லப்பட்ட வழக்கில், கார் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோட்டில் பால் நிறுவனத்தை நடத்தி வரும் மோகனசுந்தரம் என்பவர், தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு வங்கியில் கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறிய இருவர், கடந்த 16ஆம் தேதி ஒரு கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து அமைக்கப்பட்ட தனிப்படை காவலர்கள், கொரட்டூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை கைது செய்துள்ளனர். 

அவர் குற்றவாளிகளுக்கு சிம் கார்டுகள் வாங்கிக் கொடுத்ததும், கார் ஓட்டுநராக உதவி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் யார் என அடையாளம் கண்டுகொண்ட காவல்துறையினர், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை அடுத்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com