அச்சமூட்டும் ராயபுரம்: 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!!
தமிழகத்தில் நேற்று மட்டும் 805 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 407 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இதுவரை மொத்தம் 118 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சென்னையில் மட்டும் நேற்று 549 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் 2065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கத்தில் 1488 பேரும், திருவிக நகரில் 1253 பேரும் தண்டையார்பேட்டையில் 1096 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக சென்னையில் 11131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.