காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் !

காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் !

காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் !
Published on

பொள்ளாச்சியில் பேருந்து நிலையம் அருகே காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினரை கத்தியால் குத்தி ரவுடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் கியூ பிராஞ்ச் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிபவர் செல்லத்துரை. உதவி ஆய்வாளர் ரூபன் மற்றும் முதல் நிலை காவலர் மோகன சுந்தரம் ஆகிய மூவரும் பொள்ளாச்சி நீதிமன்றத்திற்கு வழக்கு சம்மந்தமாக வந்து விட்டு பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு சுரங்கம் நடைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரவுடி கும்பல் ரகளையில் ஈடுபட்டிருந்தை பார்த்து  ஆய்வாளர் செல்லத்துரை அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அந்த கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ரவுடிகள் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை குத்தி விட்டு நான்கு பேர் தப்பியோடியதாக தெரிகிறது. 

அதன்பின்னர் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் கழுத்து மற்றும் கைகளில் கத்திகுத்து காயங்களுடன் இருந்த போலீசாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரை கத்தியால் குத்தியவர்கள் கோவை பூவலப்பம்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த விஜய், பொள்ளாச்சியை சேர்ந்த பிரேம்குமார் இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மேலும் அவரது நண்பர்கள் ஸ்ரீநாத், சூர்யா உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் அதிகமாக பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையத்தில் போலீசாரை கத்தியால் குத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com