திருச்சி: கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு கொம்பன் ஜெகன் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் திருச்சி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ) கொம்பன் ஜெகன்(30). பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய இவர் மீது கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த மே 19ஆம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக இவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதில் இவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் அனைவரையும் திருவரம்பூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் என்கின்ற ஜகனை போலீசார் பிடிக்க முயன்ற பொழுது அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல்துறையினரை தாக்கி விட்டு தற்போது முயன்ற ஜெகனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com