சிவகங்கையில் என்கவுன்டரில் ரவுடி கார்த்திகை சாமி கொல்லப்பட்டார்.
மதுரையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் கார்த்திகை சாமி உள்பட 5 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை பிடிக்க முயன்ற காவலர் வேல்முருகனை ரவுடி கார்த்திகை சாமி அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரவுடி கார்த்திகை சாமியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

