புழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்

புழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்

புழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ்
Published on

சென்னை புழல் சிறையில் பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 காவலர்களுக்கு விளக்கம் கேட்டு சிறைத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த 20-ஆம் தேதி பிரபல ரவுடி பாக்சர் முரளி 5 கைதிகளால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, உதவி ஜெயிலர் பழனிவேல், முதன்மை தலைமை காவலர் நாகராஜன் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவத்தின்போது பணியில் இருந்த தலைமை வார்டன்கள் சுப்பிரமணி, செந்தில் ஆகியோருக்கும், காவலர்கள் கணேஷ், ஹரிபிரசாத் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு சிறைத்துறை டிஐஜி முருகேசன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த கைதிகள் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com