பினு பிறந்த நாளுக்காக ரவுடிகளை ஒருங்கிணைத்த விஐபி யார்? விரட்டும் போலீசார்

பினு பிறந்த நாளுக்காக ரவுடிகளை ஒருங்கிணைத்த விஐபி யார்? விரட்டும் போலீசார்
பினு பிறந்த நாளுக்காக ரவுடிகளை ஒருங்கிணைத்த விஐபி யார்? விரட்டும் போலீசார்

ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக விஐபி ஒருவர்‌, அனைத்து ரவுடிகளையும் ஒன்று திரட்டியதா‌க காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் யார் என்று தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சென்னை பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி இரவு ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 76 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அப்போது பினு உள்ளிட்ட சுமார் 25 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பிய பினுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேரள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட பினுவின் குடும்பம், பல ஆண்களுக்கு முன்பே சென்னை சூளைமேட்டில் குடியேறிவிட்டது. இவர் மீது 3 கொலை வழக்குகளும், கொலை மிரட்டல், கொலை முயற்சி என 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1998ல் தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரை, கொலை மிரட்டல்,கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார் பினு.

கைப்பேசி பயன்படுத்தும் பழக்கம் இல்லாத பினுவை, தொழில்நுட்ப ரீதியில் நெருங்குவது காவல்துறைக்கு சவாலாகவே உள்ளது. மலையம்பாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒருங்கிணைத்ததில் விஐபி ஒருவருக்கு தொடர்பிருப்பதாகச் சொல்லப்படுவது காவல்துறைக்கு மற்றொரு பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசி அழைப்புகளை ஆராய்ந்து வரும் தனிப்படைக் காவலர்கள், அந்த விஐபி யார் என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com