ஓம்எம்ஆர் சாலை போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம் - எந்தெந்த வழிகளில் தெரியுமா?

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள், துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும். காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள், பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் ராஜீவ்காந்தி சாலையில் திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் யூ-டர்ன் செய்து சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OMR
OMRpt desk

இதேபோல், கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள், ராஜீவ்கந்தி சாலையில் இடதுபுறம் திருப்பி விடப்படும். பின்னர், பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய யூ-டர்ன் பாலத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com