மெட்ரோ பணி காரணமாக கோடம்பாக்கத்தில் இன்று முதல் தொடங்கியது போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ பணி காரணமாக கோடம்பாக்கத்தில் இன்று முதல் தொடங்கியது போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ பணி காரணமாக கோடம்பாக்கத்தில் இன்று முதல் தொடங்கியது போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக அடுத்த ஒரு ஆண்டிற்கு கோடம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை, 80 அடி சாலை வரை நடைபெற உள்ளது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று 14.09.2021 முதல் ஓராண்டிற்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
* போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு, போக்குவரத்தில் மாற்றம் ஏதுமில்லை.
* கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர், கோயம்பேடு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கார் சாலையில், அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை வழியாக 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று நேராக P.T. ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை, வன்னியர் சாலை வழியாக ஆற்காடு சாலையை அடையலாம்.
* கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கார் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2- வது அவென்யூ சாலை, 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.
* வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக்கூடாது. மாறாக பவர் ஹவுஸ் சந்திப்பு, அம்பேத்கார் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.
* அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கார் சாலையில் அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி 2வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.
* ஆற்காடு சாலை - துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து பவர் ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும். ஆனால் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலை - துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை (ஒருவழி பாதை).
* வாகனங்கள் அம்பேத்கார் சாலை - 2வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து, 2வது அவென்யூ சாலை × 100 அடி சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் 2வது அவென்யூ சாலை - 100 அடி சாலை சந்திப்பிலிருந்து, அம்பேத்கார் சாலை - 2வது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை (ஒருவழி பாதை).
* வாகனங்கள் அம்பேத்கார் சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அசோக் நகர் காவல் நிலைய சந்திப்பிலிருந்து பவர் ஹவுஸ் சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை (ஒருவழி பாதை).
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்கும்படி சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டு கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com