சென்னை ஹோட்டல்களில் கெட்டுப்போன மாட்டிறைச்சி: பகீர் தகவல்!

சென்னை ஹோட்டல்களில் கெட்டுப்போன மாட்டிறைச்சி: பகீர் தகவல்!

சென்னை ஹோட்டல்களில் கெட்டுப்போன மாட்டிறைச்சி: பகீர் தகவல்!
Published on

சென்னை சிந்தாதிரிபேட்டையில் மீண்டும் கெட்டுப்போன மாட்டிறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை சிந்தாரிபேட்டையில் சக்திவேல், கோபால் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் மாட்டிறைச்சி கடை வைத்துள்ளனர். இவர்கள் நீண்ட நாட்களாக வெளி மாநிலங்களில் இருந்து கெட்டுப்போன மாட்டிறைச்சியை வாங்கி வந்து எழும்பூர், சிந்தாதரிபேட்டை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழும்பியது. இதுதொடர்பாக இவர்கள் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 7 மணியளவில் கெட்டுப்போன மாட்டிறைச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. அவை சென்னைக்குள் ஆட்டோ மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் ஆய்வாளர் ஞான செல்வம் தலைமையிலான காவல்துறையினர், மாட்டு இறைச்சியுடன் ஆட்டோவைப் பறிமுதல் செய்து எழும்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அந்த மாட்டிறைச்சிகள் அனைத்தும் கெட்டுப்போன நிலையில் உள்ளதும், அவற்றை உண்டால் பல வயிற்றுக்கோளாறுகள் ஏற்படும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மாட்டிறைச்சிகள் ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்யப்பட கொண்டுவரப்பட்டவை என்றும் விசாரணையின் போது கூறப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றை ஹோட்டல்களில் மாட்டிறைச்சியாக மட்டுமின்றி, மட்டன் பிரியாணி போன்ற ஆட்டிறைச்சி உணவு வகைகளிலும் கலப்படம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிந்தாரிப்பேட்டையில் 600 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்ட நிலையில், இன்றும் நூற்றுக்கணக்கான கிலோவில் கெட்டுப்போன மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹோட்டல்களில் அசைவம் உண்ணும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com