தமிழ்நாடு
காஞ்சிபுரத்தில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து முகாம் தொடக்கம்
காஞ்சிபுரத்தில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து முகாம் தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கப்பட்டது. செவிலிமேடு அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தை குழந்தை பிறந்ததிலிருந்து முறையே 6, 10 மற்றும் 14-வது வாரங்களில் ஏனைய தடுப்பூசிகளுடன் சேர்த்து கொடுக்கலாம். மேலும் இந்த சொட்டு மருந்தினை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி போடும் மையங்களிலும் போட்டுக்கொள்ளலாம். வயிற்றுப் போக்கிலிருந்து குழந்தைகளைக் காக்க ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 48 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.