ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடிப்பு: இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை

ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடிப்பு: இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை
ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடிப்பு: இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை

திருப்போரூர் அருகே ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடித்ததில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோயில் குளம் ஒன்று உள்ளது. அந்தக் குளத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதனால் அந்த ஊராட்சி சார்ந்த ஐந்து இளைஞர்கள் கோயில் குளத்துக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது நகைப்பெட்டி மாதிரியான அளவில் ஒரு பெட்டி ஒன்று கிடைத்துள்ளது. அதனை கையில் எடுத்து பார்த்தபோது அந்த மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடித்த பொருளின் தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே நேற்றும் மானாம்பதியிலுள்ள குளத்தின் கரையின் மற்றொரு வெடிபொருள் கண்டுக்கப்பட்டது. அதனைப் பரிசோதனை செய்தபோது ராக்கெட் லாஞ்சர் குண்டு எனத் தெரியவந்தது. 2007-ல் தயாரான ராக்கெட் லாஞ்சர் குண்டு வெடித்த நிலையில் 2009-ல் தயாரிக்கப்பட்ட குண்டு கைப்பற்றப்பட்டது. 

இந்நிலையில் பழைய இரும்புக்கடை வியாபாரி முகமது ரஃபீக்கை பிடித்து திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 ராக்கெட் லாஞ்சர் குண்டு எப்படி கிடைத்தது என்பது குறித்து உயர்காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com