மெரினாவில் வெளிநாட்டு பயணியைத் தாக்கி வழிப்பறி

மெரினாவில் வெளிநாட்டு பயணியைத் தாக்கி வழிப்பறி

மெரினாவில் வெளிநாட்டு பயணியைத் தாக்கி வழிப்பறி
Published on

சென்னை மெரினா கடற்கரையில் அடையாளம் தெரியாத நபர்கள் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவரை தாக்கி வழிப்பறி செய்துள்ள சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த திஹாவ் என்பவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையின் பின்புறம் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், திஹாவைத் தாக்கி விலை உயர்ந்த கண்ணாடியை பறித்துச் சென்றுள்ளனர்.

தலையில் பலத்த காயமடைந்த அவர் கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற
சுற்றுலாத் தலமான மெரினா கடற்கரையில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com