\
முதியவரை திசை திருப்பி ரூ.2 லட்சம் கொள்ளை: கொள்ளையர்களை தேடும் போலீசார்!

முதியவரை திசை திருப்பி ரூ.2 லட்சம் கொள்ளை: கொள்ளையர்களை தேடும் போலீசார்!

முதியவரை திசை திருப்பி ரூ.2 லட்சம் கொள்ளை: கொள்ளையர்களை தேடும் போலீசார்!
Published on

வங்கியில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவண்ணாமலை வானவில் நகர் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (63). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், union வங்கியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கு காத்திருந்த திருடர்கள் 100 ரூபாய் நொட்டை சாலையில் போட்டு இது உங்களுடைய பணமா என்று அவரின் கவனத்தை திசை திருப்பி அவர் வண்டியின் முன் பகுதியில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து கிழக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பெயரில் திருவண்ணாமலை நகர் முழுவதும் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் சோதனை செய்த நிலையில் இரண்டு லட்சம் ரூபாயை திருடிக் சென்ற கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் வலைவீசி தேடி வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com