வணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய திருடன்

வணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய திருடன்

வணிக வளாகத்திலுள்ள 4 கடைகளில் கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய திருடன்
Published on

நான்கு கடைகளின் பூட்டை உடைத்து 15 லட்சம் மதிப்பிலான லேப்டாப் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் சிஎஸ்ஐ நிர்வாகத்திற்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகர் பகுதியானது குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக மையமாகும். இந்த வணிக வளாகத்தின் அருகாமையிலேயே காவல் நிலையம் அமைந்துள்ளது. 

இந்த வணிக வளாகத்தில் உள்ளே நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் கம்ப்யூட்டர் கடை, மொபைல் கடை உட்பட நான்கு கடைகளின் பூட்டை உடைத்து 15-லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். கடையில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த மார்த்தாண்டம் போலீசார் அதில் பதிந்துள்ள கொள்ளையனின் உருவத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மார்த்தாண்டம் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொது மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com