நடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்

நடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்

நடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்
Published on

நடுரோட்டில் ஒருவரை அரிவாளால் வெட்டி ஒரு கும்பல் பணத்தை பறித்துச்செல்லும் சம்பவம் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல தனது பணியைத் தொடர்ந்த இவர், புதுச்சேரியிலுள்ள கடைகளில் பணத்தை வசூல் செய்து சென்றுள்ளார். இவரிடம் பணம் இருப்பதை, கடைப்பகுதியில் இருந்த 3 பேர் கொண்ட திருட்டுக்கும்பல் ஒன்று நோட்டமிட்டுள்ளது.

இதையடுத்து வசூலித்த பணம் ரூ.5.24 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பாலசுப்பிரமணியனை, அந்தக் கும்பல் பின்தொடர்ந்துள்ளது. சிறிது நேரம் பின்தொடர்ந்த பின்னர் நடுரோட்டிலேயே அவரது இருசக்கர வாகனத்தை அந்தக்கும்பல் வழிமறித்து நிறுத்தியுள்ளது. ஏன் தன்னை வழிமறிக்கின்றார்கள்? என்று அவர் சிந்திப்பதற்கு முன்னரே, அந்தக் கும்பலில் ஒருவர் பாலசுப்பிரமணியனை அரிவாளால் தாக்கியுள்ளார்.

அவரது கையில் வெட்டிய அந்த நபர், பணப் பையை கேட்டு மிரட்டியுள்ளார். பாலசுப்பிரமணியன் தர மறுத்ததால், தொடர்ந்து அவரை அரிவாளால் அடுத்தடுத்து அந்த நபர் வெட்டினார். ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாமல் பணப் பையை அவர் திருடனின் கொடுத்துவிட்டு, ஓடுகிறார். ஆனாலும் அந்தத் திருடன் கத்தியுடன் அவரை விரட்டிச்சென்று தாக்குகின்றார். 

இந்தச் சம்பவத்தை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் வேடிக்கை பார்த்துவிட்டு செல்கின்றனர். இதன்பின்னர் பாலசுப்பிரமணியனை அங்கிருந்து அலறியபடி ஓடிச்செல்கிறார். அந்தக்கும்பல் பணப் பையுடன் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்தக்காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தன்னிடம் பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக பாலசுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளைக்கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com