திண்டுக்கல்: வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை

திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
gold theft
gold theftfile

முதன்மை செய்தியாளர்: எம்.வீரமணிகண்டன்

திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள காட்டு மடத்தை சேர்தவர் துபாய் கருப்பையா (65). இவரது மனைவி விஜயலட்சுமி (62) தபால் நிலையத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கருப்பையா தனது வீட்டின் அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். வீட்டின் பின்பக்கம் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

Gold jewel
Gold jewelfile

இந்நிலையில் நேற்றிரவு கருப்பையா வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் திண்டுக்கல்லில் உள்ள தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதையடுத்து கருப்பையா நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் கருப்பையா புகார் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீடு மற்றும் பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளியின் கைரேகைகளை பதிவு செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com