சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?

சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?

சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?

சீர்காழியில் 2 பேரைக் கொன்று 17 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியவர்களின் பின்னணி  தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சீர்காழியில் 2 பேரை கொன்று 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய 3 பேரை நான்கே மணிநேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிடிபட்டபோது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது ஒரு கொள்ளையன் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். கொள்ளையில் தொடர்புடைய 4 ஆவது குற்றவாளியும் சிக்கியுள்ளார். அதில், ஒருவர் நகைக்கடை வியாபாரி தன்ராஜிடம் பணிபுரிந்தவர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மயிலாடுதுறை சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வரும் தன்ராஜ் சவுத்ரி, தருமகுளத்தில் நகை அடகுக்கடை மற்றும் நகைக்கடை வைத்துள்ளார். தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்துவருகிறார். காலை ஆறரை மணி அளவில் ஒரு கும்பல் தன்ராஜ் வீட்டுக்கதவை தட்டி இந்தியில் அழைத்துள்ளது. தெரிந்தவர்கள் என நினைத்து கதவை திறந்தபோது உள்ளே நுழைந்த கும்பல், தன்ராஜை தாக்கியது. இந்த கும்பலை கண்டவுடன் தன்ராஜின் மனைவி ஆஷா மற்றும் மகன் அகில் இருவரும் சத்தம் போட்டுள்ளனர். உடனே அந்த கும்பல், ஆஷா மற்றும் அகில் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது. படுக்கையறை கட்டிலின் அடியில் இருந்த 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பல், தன்ராஜ், மருமகள் நிக்கல் ஆகியோரை கத்தியால் குத்தி காயப்படுத்தியது. தொடர்ந்து வீட்டின் சிசிடிவி கேமராக்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தன்ராஜின் காரை எடுத்துக்கொண்டு தப்பியது. படுகாயம் அடைந்த தன்ராஜூம், நிக்கலும், சீர்காழி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.

 சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா விசாரணை மேற்கொண்டார். அப்போது கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் ஓலையாம்புத்தூர் சாலையில் நின்று கொண்டிருப்பதாக காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்தபோது எருக்கூர் மேலத்தெரு என்ற இடத்தில் சந்தேகப்படும்படியான 3 பேர் வயல்வெளியில் இருப்பதாக கிராம மக்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர் விசாரித்தபோது இந்த 3 பேரும் கொள்ளையர்கள் என்பது உறுதியானது. வயல்வெளியில் அவர்கள் புதைத்த நகைப்பையை எடுக்க கொள்ளையன் மஹிபாலை அழைத்துச்சென்றனர். அப்போது, காவலர்களை தாக்கிவிட்டு மஹிபால் தப்ப முயன்றதையடுத்து அவரை காவல்துறையினர் என்கவுன்ட்டர் செய்தனர். மஹிபால் தாக்கியதில் காயமடைந்த 2 காவலர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 கொள்ளையர்களிடம் இருந்து 12 கிலோ 400 கிராம் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட கொள்ளையர்களான ரமேஷ் பாட்டீல், மணிஷ் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட ரமேஷ் பாட்டீல், 3 ஆண்டுகளுக்கு முன் தன்ராஜிடம் வேலை பார்த்தவர். தற்போது கும்பகோணத்தில் உதிரிப்பாக கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். மற்றொரு கொள்ளையன் மணிஷ், ஜெயங்கொண்டத்தில் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொள்ளையில் தொடர்புடைய கர்ணாராம் என்ற மற்றொரு நபரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com