சிவகங்கை: முத்தமிழ் தேர் வருகைக்காக பழமையான மரங்கள் வெட்டி சாய்ப்பு: மக்கள் வேதனை

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி பகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக முத்தமிழ் தேர் வந்தது.
முத்தமிழ் தேர்
முத்தமிழ் தேர்PT

மானாமதுரைக்கு வந்த முத்தமிழ் தேர் வருகைக்காக மரங்கள் வெட்டப்பட்டதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் புகழை போற்றிடும் வகையில் எழுத்தாளர் மற்றும் கலைஞர் குழு சார்பில் முத்தமிழ் தேர் என்ற அலங்கார ஊர்தி கன்யாகுமரியிலிருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி பகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக முத்தமிழ் தேர் வந்தது. இந்த ஊர்தி செல்வதற்காக காந்தி சிலை சந்திப்பிலிருந்து, சிவகங்கை சாலை செல்லும் பகுதியில் சாலையின் ஓரம் இருக்கும் மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com