சென்னை அண்ணாசலையில் பள்ளம் உருவான இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயிலுக்காக அண்ணாசாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு அண்ணா மேம்பாலம் அருகே திடீரென சிமென்ட் கலவை வெளியேறியது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெமினி மேம்பாலம் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதில் 25ஜி மாநகர பஸ்சும் கார் ஒன்றும் சிக்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர் பத்திரமாக பஸ்சும் காரும் மீட்கப்பட்டன. இந்தப் பள்ளம் நேற்று பிற்பகலில் சரி செய்யப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அதே இடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.