விபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..!

விபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..!

விபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..!
Published on

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1 லட்சத்து 51ஆயிரம் ஆக பதிவாகியுள்ளது. இது ஒட்டுமொத்தமாக முந்தைய ஆண்டை விட அதிகம். 

சாலை விபத்துகளை தடுக்க மத்திய மாநில அரசுகளும், போக்குவரத்து காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவற்றையும் மீறி நிகழும் சாலை விபத்துகளில் பலர் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டிற்கான சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 2018-ம் ஆண்டு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 4‌17 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் மூவாயிரத்து 504 உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. இது 2.4 சதவிகிதம் அதிகமாகும். மேலும், கடந்த ஆண்டில் மட்டும் நான்கு லட்சத்து 67 ஆயிரத்து 44 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், ஒரு நாளில் சுமார் ஆயிரத்து 280 விபத்துகளும், அதில் சராசரியாக 415 பேர் உயிரிழப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

64.4 சதவிகிதம் விபத்துகளுக்கு காரணம் தவறான திசையில், அதாவது எதிர் திசையில் வாகனத்தை செலுத்துவதுதான் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 29 சதவிகிதம் பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்துள்ளனர். கார்களில் சீட் பெல்ட் அணியாததால் 16 சதவிகிதம் பேரும், செல்போன் உபயோகிப்பதால் 2.4 சதவிகிதம் பேரும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் 2.8 சதவிகிதம் பேரும் உயிரிழந்தனர். 

விபத்துகளில் அதிக அளவில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் 72 ஆயிரத்து 737 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளில் அதிகளவு உயிரிழப்பவர்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளன. 2018-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 216 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட மூவாயிரத்து 941 குறைவு எனவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com