நெல்லை மாவட்டத்தில் காவல்துறையின் நடவடிக்கையால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை இயக்குநர் உத்தரவின் பேரில், நெல்லை மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் சம்பந்தமான ஆவணங்களைப் பதிவு செய்யும் புதிய செயலியை காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லையில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், 2016 ஆம் ஆண்டில் குற்றங்களில் ஈடுபட்ட 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 27 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பாக காவல் வாகனத்தில் கைதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதும், மதுரை டூ விருதுநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வழியில் உள்ள சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.