தமிழ்நாடு
காயமடைந்தவரை காப்பாற்றச் சென்றவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
காயமடைந்தவரை காப்பாற்றச் சென்றவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
சாலை விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றச் சென்ற இருவர் கார் மோதி இறந்த பரிதாபம் சென்னை அருகே நிகழ்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கார் மோதியதில் கார்த்திக் காயமடைந்தார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலையடுத்து 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்தது.
அருகிலிருந்தவர்களில் சிலர் கார்த்திக்கை ஆம்புலன்சில் ஏற்ற முற்பட்டனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று ஆம்புலன்ஸ் அருகே நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஹேமச்சந்திரன் மற்றும் ஏகாம்பரம் ஆகிய இருவர் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

