ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் 2,19,409 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,06,725 ஆண் வாக்காளர்களும், 1,12,588 பெண் வாக்காளர்களும் அடங்குவர். மேலும் 96 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ளனர். போலி வாக்காளர்கள் என நேற்று முன்தினம் வரை 45,889 பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 9,621 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 30ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள 256 வாக்குச் சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையிலான வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.