\
ஆர்.கே.நகரில் தினகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்

ஆர்.கே.நகரில் தினகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்

ஆர்.கே.நகரில் தினகரன் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்
Published on

ஆர்.கே.நகர் தொகுதியின் எழில்நகரில் டிடிவி தினகரன் மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்.கே.நகர் மக்களுக்கு தினகரன் அணியினர் வீட்டு மனைப்பட்டா வழங்கியதாக, பன்னீர்செல்வம் ஆதரவாளரான நித்தியானந்தம் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதனால் அதிமுக அம்மா அணி நிர்வாகியும், ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கே.வி.ராமலிங்கம், நித்தியானந்தத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் காயமடைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் நித்தியானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com