எங்களுக்கு எதிரி தி.மு.க மட்டும்தான் என அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த அதிமுக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஆர்.கே.நகர் வேட்பாளராக டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் இதற்காக வரும் 23ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். இடைத்தேர்தலில் மதிமுக , மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க, காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தால் வரவேற்போம் என கூறினார். தங்களுக்கு எதிரி தி.மு.க மட்டும்தான் என்றும் தினகரன் தெரிவித்தார்.