\
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகை
Published on

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பெருமளவு துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் புகாரையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 3 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகருக்கு வந்துள்ளனர். மீதமுள்ள 7 கம்பெனி படையினர் ஓரிரு நாட்களில் வருவார்கள் என்று தெரிகிறது. பொதுவாக பதற்றமான தொகுதி என்றால், 3 கம்பெனி துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்படுவது வழக்கமாகும். ஆனால், ஆர்.கே.நகரில் 10 கம்பெனி துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com