\
சித்தப்பாவுக்கு ஆதரவு இல்லை: யுவன் சங்கர் ராஜா

சித்தப்பாவுக்கு ஆதரவு இல்லை: யுவன் சங்கர் ராஜா

சித்தப்பாவுக்கு ஆதரவு இல்லை: யுவன் சங்கர் ராஜா
Published on: 

ஆர்கே நகர் பாரதிய ஜனதா வேட்பாளரும் தனது சித்தப்பாவுமான கங்கை அமரனுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

கங்கை அமரன் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, ‌வாழ்த்தும் வகையில் அவரது அண்ணன் பாஸ்கரனின‌ மகள் வாசுகி, ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அப்போது தனது குடும்பத்தினர் அனைவரது பெயர்களையும் அதில் சேர்த்திருந்தார். ஆனால் தான் கங்கை அமரனுக்கு ஆதரவளிக்கவில்லை என்று யுவன்சங்கர் ராஜா ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.பிறகு வாசுகி தான் பதிவிட்டிருந்த வாழ்த்துச் சொன்னவர்கள் பட்டியலில் இருந்து யுவன் பெயரை நீக்கினார்.ஏற்கனவே ரஜினியைச் சந்தித்து கங்கை அமரன் வாழ்த்துப் பெற்றநிலையில், ரஜினி அதிரடியாக தான் ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை என்று கூறினார்.இந்த நிலையில் கங்கை அமரனுக்கு ஆதரவளிக்கவில்லை என யுவன் நேரடியாகவே தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com