\
ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்

ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்

ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்
Published on

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஆர்.கே.நகரில் போட்டியிட 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சசிகலா அணியின் டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனன், பாஜக சார்பில் போட்டியிடும் கங்கை அமரன் உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கின்றனர். மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திருப்பப் பெற 27 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com