தமிழ்நாடு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: புகார் கொடுக்க எண்கள் அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: புகார் கொடுக்க எண்கள் அறிவிப்பு
சென்னை ஆர்.கே நகரில் இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
044 25333093, 1800 4257012 மற்றும் 1913 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகாரையோ ஆலோசனையையோ தெரிவிக்கலாம். மேலும் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலுள்ள புகார் மையத்தில் மாலை 5 மணி முதல் 6 வரை நேரடியாக சென்று புகார் தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க தனித்தனியே குழுக்கள் இயங்குவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.